Calendar
January
ஜனவரி
விசேட தினங்கள்
-
பிரதோஷ தினங்களில் மாலை 5.30 மணிக்கு அருள்மிகு அமிர்தலிங்கேஸ்வரர் அபிஷேகமும் சிறப்புப் பூசையும் நடைபெறும்.
-
பூர்வப சதுர்த்தி தினங்களில் சக்தி விநாயகப் பெருமானுக்கு மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் சிறப்புப் பூசையைத் தொடர்ந்து சக்தி விநாயகர் மூஷிக வாகனத்தில் திருக்கோயில் வலம் வருதல் என்பன நடைபெறும்.
-
ஆங்கில மாத கடைசி ஞாயிற்று கிழமைகளில் மாலை 7.00 மணிக்கு அருள்மிகு ஞான வைரவருக்கு சிறப்பு அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.
-
சங்கடஹர சதுர்த்தி தினங்களில் அருள்மிகு சுந்தர விநாயகப் பெருமானுக்கு மாலை 7.00 மணிக்கு சிறப்பு அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.
-
பௌர்ணமி தினங்களில் மாலை 6.00 மணிக்கு மூல அம்மனுக்கும் ழுந்தருளி அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம்,சந்நிதியில் பொங்கல், ஸ்ரீசக்கர பூசையின் பின்னர் சிறப்பு பூசை நடைபெற்று அம்மன் தங்கரதத்தில் திருக்கோயில் பவனி வருதல்.
-
பூர்வப ஏகாதசி தினங்களில் இரவு 7.00 மணிக்கு அருள்மிகு குருவாயூரப்பனுக்கு சிறப்பு அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.
-
புதன் கிழமைகளில் காலை 10.00 மணிக்கு அருள்மிகு அர்த்தநாரீஸ்வருக்கு (சிவசக்தி) சிறப்பு அபிஷேகமும் பூசையும் நடைபெறும்.
-
ஒவ்வொரு மாதந்தக் கார்த்திகை தினத்திலும் சிவசண்முகப் பெருமானுக்குச் சிறப்பு பூசையும் ஷண்முக அர்ச்சனையும் நடைபெறும்.